பயோ மெட்ரிக்கால் கொரோனா பயம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டம் அமல் செய்யப்பட்டது.
இதன்படி வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழக ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தின்படி ரேஷன் அட்டை குடும்பதாரர்கள், பயோ மெட்ரிக் அடிப்படையில் விரல் ரேகையை பதிவு செய்தால் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.
விரல் ரேகை பதிவால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இதனை கைவிட வேண்டும் என்று சுகாதாரத் துறை நிபுணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
“பயோ மெட்ரிக் நடைமுறை சிறந்தது. ஆனால் அதனை அமல்படுத்த வேண்டிய நேரம் இது கிடையாது.
உழைப்பின் காரணமாக தொழிலாளர்களின் விரல் ரேகை அழிந்திருப்பது இயற்கையானது.
அவர்கள் பயோமெட்ரிக் கருவியில் பலமுறை விரல் ரேகையை பதிவு செய்தால் மட்டுமே அவரது அடையாளம் உறுதி செய்யப்படுகிறது. இதனால் கொரோனா வைரஸ் பரவக்கூடும்.
இதை கருத்தில் கொண்டு கேரள ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும்” என்று நுகர்வோர் நலவிரும்பிகள் தெரிவித்துள்ளனர்.