ரேஷன் பொருள்கள் வாங்க விரல் ரேகை அவசியமில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் செய்யப்பட்டது. இதன்படி பயோமெட்ரிக் முறையில் ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை பதிவு செய்தால் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் அனைத்து கூட்டுறவு மண்டல இணை பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
“ரேஷன் கடைகளில் விரல் ரேகையை அங்கீகரிக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக யாருக்கும் பொருள்கள் வழங்காமல் இருந்து விடக்கூடாது.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி பொருள்களை வழங்க வேண்டும்” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது