மாணவர் சேர்க்கைக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது பெயருடன்கூடிய பிறப்பு சான்றிதழை கட்டாயம் பெற வேண்டும்.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும்.
இந்த நடைமுறையை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.