இடைத்தேர்தலில் பாஜக அபாரம்

நாடு முழுவதும் 59 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றது. 

நாடு முழுவதும் 11 மாநிலங்களில் காலியாக உள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. 

மத்திய பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்ற 28 தொகுதிகளில் ஆளும் பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பெரும்பான்மையை நிரூபிக்க கூடுதலாக 9 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் அந்த கட்சி ஆட்சியை தக்க வைத்துள்ளது. 

குஜராத் 8 தொகுதிகளிலும் ஆளும் பாஜக வெற்றி பெற்றது.  உத்தர பிரதேசத்தின் 7 தொகுதிகளில் பாஜக 6, சமாஜ்வாதி ஓரிடத்தை கைப்பற்றின. மணிப்பூரின் 5 தொகுதிகளில் பாஜக 4, சுயேச்சை ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றார். 

ஒடிசாவின் 2 தொகுதிகளையும் ஆளும் பிஜு ஜனதா தளம் பெற்றது. நாகாலாந்தின் 2 தொகுதிகளில் தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சி ஓரிடத்திலும் சுயேச்சை ஓரிடத்திலும் வெற்றி பெற்றனர். கர்நாடகாவின் 2 தொகுதிகளிலும் ஆளும் பாஜக வெற்றி பெற்றது.  

ஜார்க்கண்டின் 2 தொகுதிகளில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஓரிடத்திலும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஓரிடத்திலும் வென்றன. சத்தீஸ்கரின் ஒரு தொகுதியில் காங்கிரஸ், தெலங்கானாவின் ஒரு தொகுதியில் பாஜக,  ஹரியாணாவின் ஒரு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

பிஹாரின் வால்மிகி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் சுனில் குமார் காங்கிரஸ் வேட்பாளர் பர்வேஷ் குமார் மிஸ்ராவைவெ தோற்கடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *