ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை கலக்கும் ‘பிளாக் அண்ட் வொயிட் சேலஞ்ச்’

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு சவால் புதிது புதிதாக முளைவிட்டு கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராமில் ஒரு சவால் பிரபலமாகி வருகிறது.


அதன் பெயர் ‘பிளாக் அண்ட் வொயிட் சேலஞ்ச்’. இது கொஞ்சம் பழைய சவால்தான். கடந்த 2016-ம் ஆண்டில் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக இந்த சவால் சமூத வலைதளத்தில் வலம் வந்தது. அதன்பின் 4 ஆண்டுகளுக்கு பிறகு ‘பிளாக் அண்ட் வொயிட் சேலஞ்ச்’ இப்போது மீண்டும் வைரலாகியுள்ளது.

பிளாக் அண்ட் வொயிட் சவாலில் பங்கேற்ற பாலிவுட் பிரபலங்கள் ஜான்வி கபூர், சாரா அலிகான்
பிளாக் அண்ட் வொயிட் சவாலில் பங்கேற்ற பாலிவுட் பிரபலங்கள் ஜான்வி கபூர், சாரா அலிகான்


பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி பிரபலங்கள் பலரும் சவாலை ஏற்று இன்ஸ்டாகிராமில் பிளாக் அண்ட் வொயிட் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். ஹாலிவுட்டில் ஜெனிபர் அனிஸ்டன், கெர்ரி வாஷிங்டன், ஜெனிபர் கார்னர், கிரிஸ்டன் பெல், இவா லோங்ரியா, கோலி கதர்ஷியன் உள்ளிட்ட பலர் சவாலில் பங்கேற்றுள்ளனர்.


மும்பை பாலிவுட்டில் ஷில்பா ஷெட்டி, சோனம் கபூர், தியா மிர்சா, மலைக்கா அரோரா, ஜானவி கபூர், சாரா அலிகான், தொழில் அதிபர் அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானி உள்ளிட்டோர் பிளாக் அண்ட் வொயிட் புகைப்படங்களை வெளியிட்டு பெண் உரிமைக்காக குரல் கொடுத்துள்ளனர்.

பிளாக் அண்ட் வொயிட் சவாலில் மேற்கத்திய பிரபலங்கள்
பிளாக் அண்ட் வொயிட் சவாலில் மேற்கத்திய பிரபலங்கள்


கோலிவுட்டில் நடிகைகள், தமன்னா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் தங்களது இன்ஸ்டாகிராமில் பிளாக் அண்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். ஷோபி சவுத்ரியின் அழைப்பை ஏற்று இந்த சவாலில் பங்கேற்றதாக ஸ்ருதி தெரிவித்திருக்கிறார்.
உலகம் முழுவதும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பிளாக் அண்ட் வொயிட் சவால் வியாபித்து பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *