மேலும் ஒரு நடிகர் தூக்கிட்டு தற்கொலை.. சினிமா சோகம் தொடர்கதையாகிறது

பாலிவுட் நடிகர் சமீர் சர்மா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 3 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.


பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு அவரது மேனேஜர் திஷா சலியான் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார்.

நடிகர் சுஷாந்தின் மேனேஜர் திஷா
நடிகர் சுஷாந்தின் மேனேஜர் திஷா

சுஷாந்தின் மரண அதிர்ச்சி மறைவதற்குள் கன்னட திரையுலகின் இளம் நடிகர் சுஷில் கவுடா கடந்த ஜூலையில் தற்கொலை செய்து கொண்டார்.கடந்த ஜூலை 31-ம் தேதி டெல்லியை சேர்ந்த பிரபல டி.வி தொகுப்பாளர் பிரியா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

கன்னட திரையுலகை சேர்ந்த நடிகை ஜெயஸ்ரீ ராமையா கடந்த மாதம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், பூமியில் இருந்து விடைபெறுகிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார். நடிகர் சுதீப் விரைந்து செயல்பட்டு நடிகையின் வீட்டுக்கு சென்று தற்கொலை பிடியில் இருந்து அவரை மீட்டார்.

நடிகர் சுஷாந்த் சிங்
நடிகர் சுஷாந்த் சிங்


இந்த வரிசையில் பாலிவுட் நடிகர் சமீர் சர்மா (வயது 44) மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 3 நாட்களுக்கு முன்பே அவர் தற்கொலை செய்திருப்பதாக தெரிகிறது. அவரது பிளாட்டில் இருந்து அழுகிய நாற்றம் வந்ததால் அக்கம்பக்கத்தினர் போலீஸில் புகார் அளித்தனர்.

போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டனர். அவர் தனியாக வசித்து வந்துள்ளார். பாலிவுட் மற்றும் இந்தி சின்னத்திரையில் நடித்து வந்த அவர் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

டி.வி. தொகுப்பாளர் பிரியா
டி.வி. தொகுப்பாளர் பிரியா


கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வெள்ளித்திரையும் சின்னத்திரையும் முடங்கியிருக்கிறது. சின்னத்திரை மீண்டு வரும் நிலையில் வெள்ளித்திரையின் இருள் இன்னும் மறையவில்லை.

இதன்காரணமாக வசதியாக வாழ்ந்த நடிகர், நடிகைகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். இதுவே திரைத்திரையில் தற்கொலைகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் என்று மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட கன்னட நடிகர் சுஷில் கவுடா
தற்கொலை செய்து கொண்ட கன்னட நடிகர் சுஷில் கவுடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *