மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி போனஸ்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி போனஸ் வழங்கப்பட உள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

“நாடு முழுவதும் 30 லட்சத்து 67 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி போனஸ் வழங்கப்பட உள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள் போனஸ் வழங்கப்படும். இதன்மூலம் இந்திய சந்தை மேம்படும்” என்று அமைச்சர் ஜவடேகர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *