தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு 10% போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி போனஸ், கருணை தொகை வழங்கப்பட்டு வருகிறது.
வரும் 14-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி போக்குவரத்து கழகம், மின் வாரியம், டாஸ்மாக் உள்ளிட்ட தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனஸ், 1.67 சதவீத கருணை தொகை என மொத்தம் 10 சதவீத போனஸ் வழங்கப்படும்.
இதன்மூலம் 2 லட்சத்து 92 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள். அவர்களுக்கு ரூ.210 கோடியே 48 லட்சம் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.