உத்தர பிரதேசத்தில் புது மணப்பெண் சுட்டுக் கொலை-வைரலாகும் வீடியோ

உத்தர பிரதேசத்தில் புது மணப்பெண்ணும் அவரது தந்தையும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


உத்தர பிரதேசம், மீரட் அருகேயுள்ள டி.பி.நகரின் சிவபுரம் காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகள் அன்சல் (வயது 19). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண விழாவுக்கு 2 நாட்களுக்கு முன்பாக ராஜ்குமாரின் வீட்டில் உறவினர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

உற்சாக நடனம்


இதில் மணப்பெண் அன்சல், உறவினர்களோடு சேர்ந்து உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்து புது மணப்பெண் அன்சல், அவரது தந்தை ராஜ்குமாரை துப்பாக்கியால் சுட்டது. இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். அன்சலின் அண்ணன் குண்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.


இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “புது மணப்பெண் அன்சலை, அதே பகுதியை சேர்ந்த சாகர் ஒருதலையாக காதலித்துள்ளார். ராஜ்குமாரின் வீட்டுக்கு வந்து பெண் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு பெண் கொடுக்க ராஜ்குமார் மறுத்துவிட்டார். இதன்பின் பிஜ்னோரை சேர்ந்த இளைஞருக்கும் அன்சாலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

கொலையாளி தப்பியோட்டம்


திருமணத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு ராஜ்குமாரின் வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சாகர், அவரது உறவினர் மோகித் ஆகியோர் நாட்டு துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் புது மணப்பெண் அன்சலும், அவரது தந்தை ராஜ்குமாரும் இறந்துவிட்டனர் ” என்று தெரிவித்தனர்.


இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிவிட்ட சாகரையும் மோகித்தையும் தேடி வருகின்றனர்.

(வீடியோ லிங்க் கீழே உள்ளது)

https://www.dailymail.co.uk/news/article-8486913/Jilted-lover-shoots-bride-father-dead-danced-India.html#v-8173071784253569483

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *