ஓடும் பஸ்ஸில் கண்ணாடி உடைந்து சாலையில் விழுந்த நடத்துநர்

ஓடும் பஸ்ஸில் கண்ணாடி உடைந்து சாலையில் விழுந்த நடத்துநர் படுகாயம் அடைந்தார்.

ஆவடி போக்குவரத்து பணிமனையில் இருந்து பூந்தமல்லிக்கு தடம் எண் 623 மினி பஸ் சேவை இயக்கப்படுகிறது. இந்த மினி பஸ் கடந்த புதன்கிழமை வழக்கமான பயணிகள் சேவையில் ஈடுபட்டிருந்தது.

ஓட்டுநர் சேகர் பஸ்ஸை இயக்க நடத்துநர் ஆறுமுகம் பயணிகளிடம் டிக்கெட் 

கட்டணம் வசூலித்தார். ஆவடி, காமராஜர் நகர் வழியாக மினி பஸ் வந்தபோது ஒரு குழந்தை சாலையின் குறுக்கே பாய்ந்தது. 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடத்துநர் ஆறுமுகம், திடீரென பிரேக் போட்டார். அவரது அருகில் நின்று கொண்டிருந்த ஓட்டுநர் சேகர் நிலை தடுமாறி முன்பக்க கண்ணாடியில் மோதினார். 

இதில் கண்ணாடி உடைந்து அவர் சாலையில் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *