நிவர் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் பஸ்கள் நிறுத்தப்படுகிறது.
நிவர் புயலை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை மதியம் முதல் மறுஉத்தரவு வரும் வரை பஸ் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படுகிறது. சொந்த வாகனங்களில் செல்வதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
புயல் காரணமாக மயிலாடுதுறை-தஞ்சாவூர் இடையிலான பயணிகள் ரயில் சேவை 24, 25-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.