நூறு சதவீத இருக்கைகளுடன் பஸ்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் இறுதியில் நாடு தழுவிய அளவில் பொது ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அப்போது ரயில், பஸ் சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதன்பின் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் பஸ் சேவை தொடங்கப்பட்டது.
எனினும் 60 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத் துறை கண்டிப்புடன் உத்தரவிட்டிருந்தது. தற்போது இறுதியாண்டு மாணவர்களுக்காக கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்களும் முழுமையாக செயல்படுகின்றன.
இதையடுத்து 100 சதவீத இருக்கைகளை நிரப்பி கொள்ளலாம். எனினும் நிலையான வழிகாட்டுநெறிகளுடன் பஸ்களை இயக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.