குடியுரிமை திருத்த சட்டம் ஜனவரியில் அமல் செய்யப்பட உள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்த சட்டம் கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டம் வரும் ஜனவரியில் அமல் செய்யப்படும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா தெரிவித்துள்ளார்.