ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 3 ஆயிரம் பேர் மீது வழக்கு

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 3 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியதாக கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் 3,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 3,082 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  விதிகளை மீறியதற்காக ரூ.15 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. இந்த கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று சென்னை போலீஸார் எச்சரித்துள்ளனர்.

சென்னையில் சட்டம் ஒழுங்கு போலீஸார் 200 இடங்களிலும் போக்குவரத்து போலீஸார் 118 இடங்களிலும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *