சமூக வலைதளங்களில் வெளியாகும் பதிவுகள், கருத்துகளால் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன.
எனவே யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “எந்தவொரு விஷயத்திலும் நன்மை, தீமைகள் ஏற்படுகின்றன. சமூக வலைதளத்தால் பிரச்சினைகள் எழுவது உண்மைதான்.
ஆனால் அதே சமூக வலைதளங்களால் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. மக்களின் ஊடகமாக சமூக வலைதளங்கள் விளங்குகின்றன. அவற்றை ஒழுங்குபடுத்தலாம். ஆனால் நீர்த்துப் போகச் செய்யக்கூடாது” என்று தெரிவித்துள்ளனர்.