69% இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

69% இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை நடைமுறையில் உள்ளது. இதை எதிர்த்து தினேஷ் என்ற மாணவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. 

“தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஜனாபதியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் மராத்தா இடஒதுக்கீட்டு வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டு வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *