ஊரடங்கு விதிகளை மீறியதாக நடிகை வனிதா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகை வனிதா விஜயகுமார் கடந்த மாதம் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம், போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்தது.
திருமணத்தின்போது விதிமுறைகள் மீறப்பட்டதாக நடிகை வனிதா மீது அடுக்குமாடி குடியிருப்பின் பொது செயலாளர் நிஷா தோட்டா என்பவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் போரூர் இன்ஸ்பெக்டர் சங்கர் நாராயணன் நடிகை வனிதா மூன்று பிரிவுகளின் கீழ்
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.