கொரோனா கூடுதல் கட்டணம்.. மருத்துவமனை மீது வழக்கு…

கொரோனா கூடுதல் கட்டணம்.. மருத்துவமனை மீது வழக்கு…தொடரப்பட்டுள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் கணேஷ். இவரது தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தந்தையை, கணேஷ் சேர்த்தார். 

வெவ்வேறு கால கட்டங்களில் ரூ.4 லட்சத்து 58 ஆயிரம் மருத்துவ கட்டணம் செலுத்தினார்.

எனினும் சிகிச்சை பலனின்றி கணேஷின் தந்தை உயிரிழந்தார். உடலை 

ஒப்படைக்க மருத்துவமனை நிர்வாகம் ரூ.2.5 லட்சம் கோரியுள்ளது. அதையும் கணேஷ் செலுத்தினார்.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் கணேஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அமைந்தகரை தனியார் மருத்துவமனை அதிக கட்டணம் வசூலித்தது. 

அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *