ஆன்லைனில் பல்வேறு சூதாட்ட விளையாட்டுகள் பிரபலமடைந்துள்ளன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.
அவர்களின் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இருவரையும் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டிருப்பதால் பரபரப்பு எழுந்துள்ளது.