தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் சாதிரீதியான பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர். இதை கண்டறிய அனைத்து ஊராட்சிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் ராஜகுரு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு கடந்த புதன்கிழமை விசாரித்தது. இந்த வழக்கு குறித்து தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.