அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ இடஒதுக்கீடு கோரி வழக்கு

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 7.5% மருத்துவ இடஒதுக்கீடு கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டு முதல் அமல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு பள்ளி மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர். எனினும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு சலுகையை வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக சுகாதாரத் துறை செயலாளர், பள்ளி கல்வித் துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் இன்று உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *