சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீதிபதி குலசேகரன் தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் உடனடியாக செயல்பாட்டு வருகிறது என்றும் சாதிவாரி கணக்கெடுப்பு பணியை தொடங்கும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அரசின் நலத்திட்ட பலன்கள் அனைத்து பிரிவினரை சென்றடைவதை உறுதி செய்யவும், 69 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளை எதிர்கொள்ள தேவைவான புள்ளிவிவரங்கலை திரட்டவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.