சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் தமிழகத்தில் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. தமிழக பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து டிசம்பரில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ள நிலையில் சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி விளக்கம் அளித்துள்ளார்.
“சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும். தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும். தொழில்நுட்ப வசதி மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன” என்று அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளார்.