சிடெட் தேர்வு தேதி குறித்து வெளியான தகவல் தவறானது என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
சிடெட் தேர்வை சிபிஎஸ்இ ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. நிகழாண்டுக்கான சி டெட் தேர்வு கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சிடெட் தேர்வுக்கான தேதியை சிபிஎஸ்இ வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்த தகவல் தவறானது. சிடெட் தேர்வு தொடர்பாக சிபிஎஸ்இ எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது. உண்மையான தகவல்களுக்கு சிடெட் இணையதளத்தைப் பார்வையிடலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.