10, பிளஸ் 2 பொதுத்தேர்வு.. சிபிஎஸ்இ அறிவிப்பு…

10, பிளஸ் 2 பொதுத்தேர்வு வகுப்பறையில் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. தமிழக பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நடப்பு டிசம்பரில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயமாக நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

“பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இணைய வழியில் நடத்தப்படாது. வழக்கம்போல வகுப்பறையிலேயே பொதுத்தேர்வு நடத்தப்படும். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி தேர்வு நடைபெறும். செய்முறை தேர்வு, தேர்வு கால அட்டவணை உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்” என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *