சிபிஎஸ்இ பள்ளி மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் செயல்படும் பள்ளிகளில் 9, 11-ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
வரும் நவ. 4-ம் தேதியுடன் மாணவர் சேர்க்கை நிறைவு பெற உள்ளது.
இந்நிலையில் கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பள்ளிகளின் மாணவர் சேர்க்கைக்கு நவ. 19 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்பிறகு நவ. 28 வரை அபராதத்துடன் மாணவர் சேர்க்கையை உறுதி செய்யலாம் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.