பத்திரம், திருமண பதிவுக்கு சிடி தருவது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 578 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இந்த அலுவலகங்களில் நடைபெறும் பத்திரம், திருமண பதிவுகளை வீடியோவில் பதிவு செய்து பொதுமக்களுக்கு சி.டி.யாக வழங்க வேண்டும். இதற்காக ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் பெரும்பாலான சார் பதிவாளர் அலுவலகங்களில் சிடி வழங்கப்படுவது இல்லை என்று பொதுமக்கள் புகார்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அனைத்து சார்பதிவாளர்களுக்கும் பதிவுத் துறை ஐஜி முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதாவது பத்திரம், திருமண பதிவுக்கு பொதுமக்களுக்கு கண்டிப்பாக சிடி வழங்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஒருவேளை சார் பதிவாளர் அலுவலகங்களில் சிடி தர மறந்தால், பொதுமக்கள் கண்டிப்பாகப் கேட்டுக் பெற வேண்டும். இது ஒரு முக்கிய சாட்சியாகும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.