வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழா..

வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் வரும் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பொது இடங்களில் விழாவை கொண்டாடக்கூடாது, வீடுகளிலேயே விழாவை கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அரசு தரப்பில் இன்று காலை விரிவான செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது.

வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

“தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதையும் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும் தடை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக சென்னை ஐகோர்ட் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. அதில் அரசின் ஆணையை பொதுமக்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும்” என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

பாஜக கோரிக்கை

பாஜக மாநில தலைவர் எல். முருகன், சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவுநாளையொட்டி அவரது படத்துக்கு இன்று மரியாதை செலுத்தினார்.

அப்போது விநாயகர் சதுர்த்தி விழா குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

“விநாயகர் சதுர்த்தி அனுமதி வழங்கும் விவகாரத்தில் மாநிலங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு.

மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும்” என்று எல் முருகன் தெரிவித்தார்.

நீதிமன்ற வழக்கு

இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் இல. கணபதி தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, ஆண்டாண்டு காலமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் தனிமனித இடைவெளியை பின்பற்றி சிலைகள் வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வழக்கறிஞர் அளித்த விளக்கத்தில், பெரிய வாகனங்களில் கூட்டமாகச் சென்று சிலைகளை கடலில் கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர,

முகக்கவசங்கள் அணிந்து, சமூக விலகளைப் பின்பற்றி ஐந்துக்கும் குறைவான நபர்கள் சிலைகளைக் கொண்டு செல்ல எந்தத் தடையும் இல்லை என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *