சிமென்ட் விலை உயர்வு

சிமென்ட் விலை ரூ.50 விலை உயர்ந்துள்ளது. 

வீடுகளின் கட்டுமானத்தில் 65 சதவீதம் வரை சிமென்ட் முக்கிய பங்கு வகிக்கிறது. சிமென்ட் விலை அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. ஒரு மூட்டை சிமென்ட் ரூ.390-க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து ஒரு மூட்டை சிமென்ட் ரூ.440-க்கு விற்பனையாகிறது. சிமென்ட் விலை உயர்வால் கட்டுமான துறை பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *