மத்திய தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு வெங்காயம் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி மத்திய தொகுப்பில் இருந்து மாநில அரசுகள் அதிக அளவில் வெங்காயத்தை கொள்முதல் செய்து கொள்ளலாம்.
மாநில அரசுகள் இதுவரை 8,000 டன் வெங்காயத்தை கொள்முதல் செய்துள்ளன. மாநில அரசுகளுக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.26 முதல் ரூ.28 விலையில் வழங்கப்படும் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் லீனா நந்தன் தெரிவித்துள்ளார்.