ஜன. 31-ல் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு

வரும் ஜன.31-ல் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது.

சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியில் சேர மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஜூலை 5-ம் தேதி நடைபெற இருந்தது. 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் ஜனவரி 31-ம் தேதி மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *