மத்திய குழு தமிழகத்தில் ஆய்வு

புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய குழு தமிழகத்தில் இன்று ஆய்வு செய்தது.

தமிழகத்தில் அண்மையில் நிவர் புயல் கரையைக் கடந்தது. இதைத் தொடர்ந்து புரெவி புயலால் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக வடமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நிவர் புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையிலான 8 பேர் கொண்ட மத்திய குழு இன்று தமிழகம் வந்தது.

அவர்கள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று ஆய்வு நடத்தினர். மத்திய குழுவினர் நாளை புதுச்சேரியில் ஆய்வு மேற்கொள்கின்றனர். நாளைமறுநாள் முதல்வர் பழனிசாமியை மத்திய குழுவினர் சந்தித்துப் பேச உள்ளனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *