செயின் ஸ்மோக்கரை கொரோனாவுக்கு ரொம்ப பிடிக்குமாம்!

மத்திய சுகாதாரத் துறை ஓர் ஆய்றிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பல உண்மைகள் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளன.
“சுவாசம், வாய் வழியாகவே கரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவுகிறது.

புகை பிடிப்போரின் விரல்கள் அடிக்கடி உதடுகளை தொடும். இதன்மூலம் கரோனா வைரஸ் எளிதில் தொற்றக்கூடும். பைப், ஹுக்காவை பலர் பயன்படுத்தும்போது வைரஸ் தொற்று ஏற்படும்.
புகை பிடிப்போருக்கு இதய நோய், புற்றுநோய், நுரையீரல் பிரச்சினை, நீரழிவு நோய்கள் ஏற்படுகின்றன.

தொடர்ச்சியான புகை பழக்கத்தால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அவர்களை கரோனா வைரஸ் எளிதில் தொற்றும். வைரஸ் பாதிப்பில் இருந்து அவர்கள் மீள்வதற்கான வாய்ப்புகள் குறைவு.

உயிரிழப்பதற்கான அபாயம் அதிகம்.பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மென்று, பொது இடங்களில் எச்சில் துப்புவோரால் கரோனா வைரஸ் வேகமாகப் பரவுகிறது. இந்த அநாகரிக பழக்கத்தால் கரோனா மட்டுமன்றி காசநோய், பன்றிக்காச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுவதற்கான ஆபத்தும் உள்ளது” என்று சுகாதாரத் துறை அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *