சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம்

சிபிஎஸ்இ இயக்குநர் ஜோசப் இமானுவேல், அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளின் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
“கொரோனா பாதிப்பு அனுபவத்தை கருத்தில் கொண்டு மாற்று வழிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு பாடத்திட்டங்களை இரு பருவங்களாக பிரித்து ஒவ்வொரு பருவ இறுதியிலும் தேர்வு நடத்தப்படும்.
முதல் பருவத் தேர்வு நவம்பர், டிசம்பரில் நடத்தப்படும். 2-வது பருவத் தேர்வு மார்ச், ஏப்ரலில் நடத்தப்படும். இரு பருவங்களில் எடுக்கப்படும் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு இறுதி மதிப்பெண் வழங்கப்படும்” என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *