பழைய அரசு வாகனங்களுக்கு கல்தா கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஸ்கிராப் பாலிசி திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 15 ஆண்டுகள் பழைமையான வாகனங்களை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களின் பதிவு சான்றிதழை புதுப்பிக்கும் நடைமுறையை நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அடுத்தகட்டமாக தனிநபர் வாகனங்கள், தனியார் வர்த்தக வாகனங்களுக்கான விதிமுறைகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. பழைய கார்களை அழித்துவிட்டு புதிய கார் வாங்குவோருக்கு 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் அறிவித்தார்.