வீடு தேடி வருகிறார் வரலட்சுமி.. செங்கல்பட்டு தொகுதியில் வெற்றிமுகம்…

செங்கல்பட்டு தொகுதி திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன், வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இந்த தொகுதியில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
செங்கல்பட்டு தொகுதி தி.மு.க வேட்பாளரும் தற்போதைய எம்.எல்.ஏவுமான வரலட்சுமி மதுசூதனன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

செங்கல்பட்டு பகுதியில் வாக்கு சேகரித்த வரலட்சுமி மதுசூதனன்
செங்கல்பட்டு பகுதியில் வாக்கு சேகரித்த வரலட்சுமி மதுசூதனன்

கடந்த 25-ம் தேதி அவர் செங்கல்பட்டு கணபதிநகர் பகுதியில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். வாகனத்தில் வீதி வீதியாக சென்ற அவர் மக்களிடம் ஆதரவு கோரினார். ஏராளமான பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தனர்.

செங்கல்பட்டு பகுதியில் வாக்கு சேகரித்த வரலட்சுமி மதுசூதனன்
செங்கல்பட்டு பகுதியில் வாக்கு சேகரித்த வரலட்சுமி மதுசூதனன்

கடந்த வெள்ளிக்கிழமை செங்கல்பட்டு பாசி தெருவில் உள்ள மசூதி, பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தர்கா, செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை போலீஸ் நிலையம் அருகே இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை நந்திவரம் கூடுவாஞ்சேரி 13-வது வார்டு பகுதியில் காலை 8.30 மணிக்கு வரலட்சுமி மதுசூதனன் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இதைத் தொடர்ந்து 14, 18, 15, 16, 17, 2, 3, 4, 5, 8, 9. ஆகிய வார்டுகளில் அவர் வாக்கு சேகரிக்கிறார்.

செங்கல்பட்டு பகுதியில் வாக்கு சேகரித்த வரலட்சுமி மதுசூதனன்
செங்கல்பட்டு பகுதியில் வாக்கு சேகரித்த வரலட்சுமி மதுசூதனன்

திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் வீடு, வீடாக சென்று பிரச்சாரம் செய்கிறார். அவர் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுகின்றனர்.

இந்த முறையும் செங்கல்பட்டு தொகுதியில் அவர் வெற்றிவாகை சூடுவார் என்று கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *