செங்கல்பட்டு தொகுதியில் வெற்றி முகத்தில் தி.மு.க வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன்

செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனனுக்கு செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு கிடைத்து வருகிறது.


செங்கல்பட்டு தொகுதி தி.மு.க வேட்பாளரும் தற்போதைய எம்.எல்.ஏவுமான வரலட்சுமி மதுசூதனன், தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட 8 வார்டுகளில் தி.மு.க நகரச் செயலாளர் சண்முகம் தலைமையில் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து வாக்குகளை சேகரித்தார். தொடர்ந்து பேரமனூர், சட்டமங்கலம், திருக்கச்சூர், கடம்பூர், கலிவந்தப்பட்டு, கீழ்கரணை, செங்குன்றம், பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வீடு வீடாக ஓட்டு கேட்டார். அப்போது வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனனுக்கு பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

வாக்குசேகரிப்பில் வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன்
வாக்குசேகரிப்பில் வேட்பாளர் வரலட்சுமி

பேரமனூரில் உள்ள பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் பேசுகையில், வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்று தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது. என்னை மீண்டும் செங்கல்பட்டு தொகுதியில் வெற்றி பெற வைத்தால் நகராட்சி பகுதியில் அனைத்து அரசு திட்டங்களையும் கொண்டு வருவேன் என்றார்.
பிரசாரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ மூர்த்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஆர்பர்ட், வட்டச் செயலாளர்கள் வினோத்குமார், ஏழுமலை, சிவபிரகாஷ், சுரேஷ்குமார், சுப்பிரமணி, சேகர், வெங்கட் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தீவிர வாக்குசேகரிப்பில்  வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன்
தீவிர வாக்குசேகரிப்பில் வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன்

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட கருநிலம் கொண்டமங்கலம் தென்மேல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகளைச் சேகரித்தார் வரலட்சுமி மதுசூதனன். பின்னர் அவர் பேசுகையில், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்திருக்கின்றன. அதை சீரைமைக்க அதிகாரிகளைச் சந்தித்தும் ஆளுங்கட்சியான அதிமுக அரசு கண்டுக்கொள்ளவில்லை. தி.மு.க ஆட்சி வந்ததும் மக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

திறந்த வேனில் பிரசாரம் செய்யும் வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன்
திறந்த வேனில் வாக்குகளை சேகரிக்கும் வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன்

செங்கல்பட்டு மறைமலைநகர் சிங்க பெருமாள்கோயில் ஆகிய பகுதிகளுக்கு செல்ல அரசு பேருந்து இயக்கப்படும். தி.மு.கவின் தேர்தல் அறிக்கையின்படி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாளாக அதிகரிக்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தளபதி மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் இந்தப்பகுதியிலிருக்கும் நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். அதற்கு நீங்கள் அனைவரும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.

கூட்டணி கட்சி நிர்வாகிகள் புடைசூழ வாக்குசேகரிக்கும் வேட்பாளர் வரலட்சுமி
கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஓட்டு கேட்டு செல்லும் வேட்பாளர் வரலட்சுமி

இதில் திமுக நிர்வாகிகள் ஆப்பூர் சந்தானம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், மகளிரணி நிர்வாகி ஈஸ்வரி, ஒன்றிய இளைஞரணி நிர்வாகி சத்யா, ஊராட்சி செயலாளர்கள் கருநிலம் வேதாச்சலம், ராஜேந்திரன், ஆறுமுகம், எல்லப்பன், முகமதுகான், ராமதாஸ், திருமலை, பிரதீப், ஜெயக்குமார், கருணாகரன், கோபி உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வாக்குகளை சேகரித்த வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன், 21 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். நகராட்சியில் உள்ள பன்னாட்டு தொழிற்சாலைகளில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பெண்களிடம் ஓட்டு கேட்கும் வரலட்சுமி மதுசூதனன்
பெண்களிடம் ஓட்டு கேட்கும் வரலட்சுமி மதுசூதனன்

செங்கல்பட்டு தொகுதியை பொறுத்தவரை தி.மு.க வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதனால் அவர் செல்லும் இடம் எல்லாம் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளிப்பதோடு ஆரத்தி எடுத்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக இந்தத் தொகுதி மக்களின் குறைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வந்ததால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பாளர் வரலட்சுமிக்கு மாலை அணிவிக்கும் பெண்கள்
வேட்பாளர் வரலட்சுமிக்கு மாலை அணிவிக்கும் பெண்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *