பெண்களுக்கு ரோஜா பூ கொடுத்து செங்கல்பட்டு திமுக வேட்பாளர் வரலட்சுமி அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கல்பட்டு தொகுதி திமுக வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவருக்கு பொது மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மக்கள் மத்தியில் வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் பேசுகையில் நான் உங்கள் வீட்டு பிள்ளை.
கடந்த சட்டமன்ற தேர்தலில் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்தீர்கள். எதிர்கட்சி எம்.எல் ஏவாக இருந்த போதிலும் தொகுதியின் வளர்ச்சிக்காகவும் மக்கள் நலனுக்காவும் சட்டசபையில் பேசினேன்.

மீண்டும் மக்களை நம்பி இரண்டாவது தடவையாக போட்டியிடுகிறேன் இந்தத் தடவை எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வீர்கள்.
நான் வெற்றி பெற்றதும் திமுக தலைவர் தளபதி மு.க ஸ்டாலினின் தேர்தல் வாக்குறுதியை 100 நாளில் நிறைவேற்றுவேன்.

ஏனென்றால் தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி மலர போகிறது. அப்போது மக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும்.
இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒட்டேரியில் ரயில் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் அதன் மூலம் இந்தப் பகுதி மக்கள் பயன் அடைவார்கள்.

அடுத்தப்படியாக வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் தானியங்கி நகருcd படிகட்டுகளுடன் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
சாலை வசதி, குடிநீர், வீட்டுமனை பட்டா, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் உள் பட மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் என்று பேசினார்.

செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் வாக்குகளை சேகரித்த வேட்பாளர் வரலட்கமி மதுசூதனன் பேசுகையில் நகராட்சி முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.
பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வசதிகள் மேம்படுத்தப்படும் பல் மருத்துவ கல்லூரி கொண்டு வரப்படும். பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்றார்.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் வாக்கு சேகரித்த வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் அங்கு இருந்த பெண்களுக்கு ரோஜா பூ கொடுத்து உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு போடும்படி கேட்டார்.
முஸ்லிம் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார். இந்த தொகுதியில் வரலட்சுமி மதுசூதனன் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
