கூடுவாஞ்சேரி- பரனூர் சாலை 8 வழிச்சாலையாகிறது.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெருங்களத்தூர் முதல் பரனூர் வரை போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முதல்கட்டமாக பெருங்களத்தூர் முதல் கூடுவாஞ்சேரி வரை 8 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கூடுவாஞ்சேரி முதல் பரனூர் வரை 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த சாலைப் பணி மாநில நெடுஞ்சாலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சாலை விரிவாக்க பணிக்கு 250 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க உள்ளது. முதல்கட்டமாக இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன.
இச்சாலை அமைக்கப்பட்டால் சென்னையில் இருந்து பரனூர் வரையிலான பயண நேரம் 30 நிமிடங்களுக்கு மேல் குறையும் என்று நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.