சென்னையில் தாய், மகள் பலி.. ஆணையம் நோட்டீஸ்

அயப்பாக்கம் அயனம்பாக்கத்தை சேர்ந்த பேராசிரியை கரோலின் பிரிசில்லா (வயது 50). கணவரை இழந்த இவருக்கு 2 மகள்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு, கரோலினும் அவரது மூத்த மகள் எவிலினும் (வயது 20) பைக்கில் சென்றனர்.

சென்னை பைபாஸ் சாலையின் நொளம்பூர் சர்வீஸ் சாலையில் அவர்கள் வந்தபோது இங்குள்ள மூடப்படாத கால்வாயில் விழுந்தனர். இதில் 2 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து எப்படி நேரிட்டது என்பது தெரியவில்லை. 

சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு நீளும் மழைநீர் வடிகால் மூடப்படாமல் திறந்து கிடக்கிறது. சாலையும், கால்வாயும் ஒரே மட்டத்தில் உள்ளன. சாலையில் போதிய தெருவிளக்கு வசதியும் இல்லை. இதன்காரணமாகவே தாயும் மகளும் கால்வாயில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று வாகனஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். 

சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தவறாத அரசு, சாலைகளில் போதுமான அடிப்படை வசதிகளை செய்ய மறப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விபத்து ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தது. அந்த செய்திகளின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. விபத்து குறித்து 3 வாரங்களில் விளக்கம் அளிக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையர், திருவள்ளூர் ஆட்சியர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணையம் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *