`அம்மாவை வெட்டாதீங்க அப்பா’ – மனைவி, மகளை கொல்ல முயன்ற வங்கி ஊழியர்

சிவன் கோயிலுக்கு செல்ல மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்த வங்கி ஊழியர், ஆத்திரத்தில் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுவிட்டார்.

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் சர்வமங்களா நகரில் குடியிருந்து வருபவர் சீனிவாசன். தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவரின் மனைவி விஜயலட்சுமி (40).

சீனிவாசன்

சீனிவாசன். கோயில், யோகா என அடிக்கடி சென்று வந்தார். அதனால் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து அவர் வேலைக்குச் செல்லவில்லை. சம்பவத்தன்று (18.7.2020) பிரதோஷம் என்பதால் கோயிலுக்கு செல்ல வேண்டும்,

கார் சாவியும் பணமும் கொடு என்று மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு விஜயலட்சுமி என்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். அதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன், சமையலறையிலிருந்து காய்கறிகளை வெட்ட பயன்படுத்தும் கத்தியை எடுத்து மனைவியை குத்தியுள்ளார். விஜயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு கண்விழித்த அவரின் மகள் நேத்ரா (13), அம்மாவை வெட்டாதீங்க அப்பா என தடுத்தார்.

சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பு

அப்போது மகளுக்கும் கத்திகுத்து விழுந்தது. இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததும் சீனிவாசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அதிகாலையில் விஜயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு கண்விழித்த அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாய், மகளை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிட்லபாக்கம் காவல் நிலையம்

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். பின்னர் இது குறித்து தகவலறிந்த சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசனைத் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் பெட்ரூம்பில் சீனிவாசன், விஜயலட்சுமியின் 7 வயது மகன் கிருஷ்ணேஸ்வரன் தூங்கிக் கொண்டிருந்தார். நல்ல வேளை அவர் கண்விழிக்கவில்லை. அவரும் சீனிவாசனை தடுத்திருந்தார் கிருஷ்ணேஸ்வரனுக்கும் கத்திகுத்து விழுந்திருக்கும் என விஜயலட்சுமியின் உறவினர்கள் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *