சென்னை மேம்பாலங்களில் செங்குத்து பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னையை பசுமையாக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக சென்னையின் முக்கிய பாலங்களின் தூண்களில் அழகு செடிகளை வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இது செங்குத்து பூங்கா என்று அழைக்கப்படும்.
இதன்படி சென்னையில் மின்ட், டவுட்டன், பாந்தியன் சாலை, பெரம்பூர், மகாலிபங்கபுரம், உஸ்மான் சாலை, டி.டி.கே.சாலை சந்திப்பு,
காவேரி மருத்துவமனை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, நந்தனம் ஜி.கே.மூப்பனார் மேம்பாலம்,
எல்.பி. சாலை, காந்தி மண்டபம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள 12 மேம்பாலங்களின் கீழ் செங்குத்து பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக ஒட்டுமொத்தமாக ரூ.8.15 கோடி செலவிடப்பட உள்ளது. செங்குத்து பூங்காக்கள் தயாராகவுடன் தனியார் அல்லது அரசு நிறுவனங்களிடம் பராமரிப்பு பணிகள் ஒப்படைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.