சென்னையில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறை

சென்னையில்  சிசிடிவி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுகிறது.

சென்னை வேப்பேரியில் காவல் ஆணையம் அலுவலகம் 8 மாடி கட்டிடத்தில் செயல்படுகிறது. இங்கு ரூ.40 கோடி செலவில் அதிநவீன வசதிகள் கொண்ட 7 மாடி கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 

புதிய கட்டிடத்தின் முதல் இரு தளங்களில் நவீன சைபர் ஆய்வகம் அமைக்கப்படுகிறது. அதற்கு மேல் உள்ள தளங்களில் சென்னை பெருநகர போக்குவரத்தை நேரடியாக கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. 7-வது தளம் முழுமையாக சிசிடிவி கேமரா கண்காணிப்புக்காக ஒதுக்கப்படும்.

சென்னை பெருநகரில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து புதிய கட்டிடத்தில் அமைக்கப்படும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *