சிறுமியை காதலித்த கொலை குற்றவாளி; ஆதரவு கொடுத்த இளம்பெண் செய்த கொடூரச் செயல்

சென்னையில் 14 வயது சிறுமியை கொலை குற்றவழக்கில் கைதான இளைஞர் காதலித்திருக்கிறார். பின்னர் அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இந்தச் சமயத்தில் சிறுமிக்கு ஆதரவளிப்பதாகக் கூறி சிறுமியின் உறவினரான இளம்பெண், சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளியிருக்கிறார்.

எண்ணூர் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் குடியிருந்தார். இவரை கரீம் என்பவர் காதலித்திருக்கிறார். பின்னர் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இந்தத் தகவல் சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரிந்ததும் அவர்கள் சிறுமியைக் கண்டித்தனர். இந்தச் சமயத்தில் சிறுமியின் உறவினர் இந்துமதி என்பவர், சிறுமியை அழைத்துச் சென்றார். இந்துமதியின் வீட்டில் சிறுமி இருந்தபோது அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தகவல் வெளியானது.

child abuse
child abuse

இதுகுறித்து சிறுமி, எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு சிறுமி தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸார் சிறுமியிடம் விசாரித்தனர். சிறுமி அளித்த தகவலின் பேரில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்த கரீம் (22) என்பவரை போலீஸார் கைது செய்தனர். கரீம் மீது ஒரு கொலை வழக்கு உள்ளது.

தொடர்ந்து நடந்த விசாரணையில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் தலைமறைவாக இருந்த எர்ணாவூரைச் சேர்ந்த இந்துமதி (22) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இந்துமதி கொடுத்த தகவலின்பேரில் பாலியல் தரகர் அங்குசாமியை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

இன்னொரு சம்பவம்

சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் வசித்துவருகிறார். இவர் கொல்கத்தா சென்றபோது அங்கு கால்டாக்ஸி டிரைவர் அத்தானுகிஷோர்தாஸ் (34) என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பிறகு இருவரும் நன்றாக பழகியிருக்கின்றனர். அப்போது அத்தானு கிஷோர்தாஸ் சென்னைக்கு வந்திருக்கிறார்.

வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்ணுடன் அத்தானு கிஷோர்தாஸ் நெருக்கமாக இருந்திருக்கிறார். அதை வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார். பின்னர் அந்த வீடியோவை அந்தப் பெண்ணிடம் காண்பித்து பணம் தருமாறும் பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் இந்த வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதன்படி பணம் கொடுக்காததால் வீடியோவை பெண்ணின் உறவினர்களுக்கு அத்தானுகிஷோர்தாஸ் அனுப்பியிருக்கிறார்.

இதையடுத்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி அத்தானுகிஷோர்தாஸை கைது செய்தனர். இவர் மேற்குவங்காளத்தைச் சேர்ந்தவர். கைதான அத்தானுகிஷோர்தாஸிடமிருந்த வீடியோவை போலீஸார் கைப்பற்றினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *