நலவாரியங்களில் பதிவு செய்ய சென்னை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை மாவட்டத்தை சேர்ந்த கொத்தனார், மேஸ்திரி, தச்சர், பெயின்டர், தையல், சலவை, குப்பை சேகரிப்போர், முடிதிருத்துவோர் மற்றும் இதர உடல் உழைப்பு தொழில் செய்யும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்யலாம்.
www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையாண ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் அல்லது கணினி மையங்களை அணுகி நலவாரியங்களில் பதிவு செய்யலாம்.
இதன்மூலம் பல்வேறு நலத்திட்டங்களில் பயன் பெற முடியும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.