சென்னையில் கொரோனா தொற்று பகுதிகள் 70 …ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் சென்னையில் கொரோனா தொற்று பகுதிகள் எதுவுமே இல்லை. ஆனால் இந்த மாதம் கொரோனா தொற்று பகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 70 இடங்களில் தகரங்களால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மிக அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 29 இடங்கள், கொரோனா தொற்று பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.