சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக முதல்கட்டமாக 12,405 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதில் 2,673 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பது தெரியவந்தது.
இரண்டாம் கட்டமாக 6,389 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 2,062 பேருக்கு எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது தெரியவந்தது. அதாவது சென்னையில் 32.3 சதவீதம் பேருக்கு எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. இந்த எதிர்ப்பு சக்தி 3 மாதங்கள் வரை மட்டுமே நீடிக்கும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.