தொழில் உரிமம் புதுப்பிக்க டிச. 31 வரை அவகாசம்

தொழில் உரிமம் புதுப்பிக்க டிச. 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் வருவாய் துறையின் வாயிலாக நிறுவனங்களின் தொழில் உரிமத்தை 2020 மார்ச் 31-ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும்.

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தொழில் உரிமத்தை புதுப்பிக்க வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் தங்களின் தொழில் உரிமத்தை டிச. 31 வரை எவ்வித அபராதமும் இன்றி புதுப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *