சென்னையில் சொத்து வரி நிலுவை தொகைக்கான 2% தனி வட்டி 0.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டு தொடங்கிய 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்த வேண்டும். இந்த காலத்துக்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5% ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து வரி செலுத்த தவறியவர்களிடம் 2 சதவீத தனி வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு 2 சதவீத தனிவட்டி 0.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வரும் 2021 மார்ச் 31-ம் தேதிக்குள் 0.5 சதவீத தனிவட்டியுடன் சொத்து வரி செலுத்தலாம்.
ஏற்கெனவே 2 சதவீத தனிவட்டியுடன் சொத்து வரி செலுத்தியவர்களுக்கு 0.5 சதவீத தனிவட்டி கணக்கிட்டு மிகைத் தொகை அடுத்த அரையாண்டுக்குள் ஈடு செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.