சென்னையில் சொத்து வரியை வசூலிக்க வீதி, வீதியாக பிரச்சாரம்

சென்னையில் சொத்து வரியை வசூலிக்க வீதி, வீதியாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னை மாநகராட்சியில் சொத்து வரி வசூல் குறைவாக உள்ளது. மக்களின் வருவாய் இழப்பு, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு போன்றவற்றால் சொத்து வரி வசூல் இயல்பான அளவைவிட குறைவாக உள்ளது. இதுவரையில் ரூ. 376 கோடி வசூலிக்கப்பட்டிருக்கிறது.

சொத்து வரியை உடனே செலுத்த வலியுறுத்தி வீதி வீதியாக ஆட்டோ மூலம் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதுதவிர சொத்து உரிமையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது. ஆங்காங்கே முகாம்களும் நடத்தப்படுகின்றன.

சொத்து வரி செலுத்தாமல் உள்ள நிலுவை தொகைக்கு விதிக்கப்படுகின்ற அபராத வட்டி 2 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் ஆன்லைன், இ.சேவை மையம், கூகுள்பே, பேடிஎம் மற்றும் வரி வசூலிப்பவர் மூலம் சொத்து வரியை செலுத்தலாம்.

மார்ச் 31-ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தி அபராத வட்டியை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *